நாளைத் தொடக்கி வைத்து நிறைவும் செய்த சுவேதா, அபிசனாவின் கவிதையை வாசித்தார்:
« உயிருடன் இருப்பது என்பது தனியாக வாழ்வது மட்டுமல்ல. ஒரு சமூகத்துக்குச் சொந்தமாக இருப்பதும்தான். ஒருவர் நோய்வாய்ப்படும்போது மறைந்துவிடாத சமூகம். […] ஆரோக்கியமே எமது செல்வம், தடுப்பே எமது துணை, ஒற்றுமையே எமது பலம் என்பதை ஒருபோதும் மறவோம். »
2025 ஜனவரியில் இம்முயற்சி தொடங்கியது முதல் உழைத்த தன்னார்வக் குழுவுக்கும், அன்று உதவிய அனைவருக்கும் நன்றி.