போபினி நகர சபை ஒழுங்கு செய்த தெற்காசிய வாரத்தில், தெற்காசியப் பெண்களின் ஆரோக்கியம் (பெரினே உடற்பயிற்சி, கர்ப்பம்) பற்றி நாம் நடத்திய விழிப்புணர்வுப் பட்டறையின் படங்கள்.
வெவ்வேறு தலைமுறைப் பெண்கள், சுகாதார நிபுணர்கள், பராமரிப்பாளர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், கலாசார இடைநிலையாளர்கள் ஆகியோருக்கு இடையிலான உரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாகவும் மனதைத் தொடுவதாகவும் இருந்தன. இந்த வாய்ப்புக்காகப் போபினி நகர சபைக்கு நன்றி!